பாஜகவை ஆதரிக்கும் சிவசேனா! அதிர்ச்சியில் காங்கிரஸ்!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கொண்டு வரும் குடியுரிமை திருத்த மசோதவுக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. பாஜக தலைமையிலான கடந்த ஆட்சியிலே, குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் போதிய ஆதரவு இல்லாததால் அப்போது மசோதா நிறைவேறவில்லை. மக்களவை காலம் காலாவதியானதால் கிடப்பில் போடப்பட்ட மசோதாவும் காலாவதியானது. 

குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களை  மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மசோதாவில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் அதாவது முஸ்லீம் அல்லதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவிற்கு வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவில் மத ரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 

மக்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகம் செய்யும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை எனவும், இந்த மசோதாவால் 1.76 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.  பிற்பகலில் மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை அமித் ஷா அறிமுகம் செய்வார் எனத் தெரிகிறது.

இந்த மசோதாவை ஆதரிக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சிமைத்துள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தர்மசங்கடமான மனநிலையில் இருக்கிறது. 

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்களவையில் தேவைக்கு அதிகமாகவே பெரும்பான்மை இருப்பதால், குடியுரிமை திருத்த மசோதா எளிதாக நிறைவேறிவிடும். ஆனால், மாநிலங்களவையில் நிறைவேறுமா அல்லது கடந்த முறை போல கிடப்பில் போடப்படுமா என எதிர்பார்க்கப்டுகிறது. 

மொத்தம் 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 238 எம்.பிக்கள் உள்ளனர். மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றால் 120 எம்.பி.க்கள் ஆதரவு தேவை என்ற நிலை உள்ளது. தற்போது பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 102 எம்.பி.க்கள ஆதரவு இருக்கிறது. மசோதா நிறைவேற பாஜகவுக்கு இன்னும் 18 எம்.பி.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், அதிமுக(11 எம்.பி.க்கள்), பிஜு ஜனதா தளம்(7 எம்.பிக்கள்), டிஆர்எஸ் (6 எம்.பி.க்கள்), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்(2 எம்.பி.க்கள்) ஆகிய கட்சிகளுடன் பாஜக பேசி வருவதால் இந்த மசோதா எளிதாக நிறைவேறும் என தெரிகிறது. 

இந்த நிலையில் தான் திடீர் திருப்பமாக சிவசேனா இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. சிவசேனா மூத்த தலைவரூம், அண்மையில் அமைந்த மகாராஷ்டிரா அரசு அமைவதில் பெரும் சிரத்தை எடுத்து செயல்பட்ட சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ‘‘சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் புலம் பெயர்ந்து வந்த இந்துக்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும். அதனால் இந்த  மசோதாவை ஆதரிப்போம். அதேசமயம் அவர்களை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும் காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகும் கூட, காஷ்மீர் பண்டிட்டுகள் இன்னும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை என குறிப்பிட்டு கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shivesena support Bjp in citizenship amendment bill


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->