ஆட்டோவில் பாலியல் தொல்லை..கீழே குதித்து தப்பிய மாணவி!
Sexual harassment in the auto a student jumps down and escapes
ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் சத்யம் சிங், அவரது கூட்டாளிகள் ஆகாஷ்ம், ரஞ்சித் சவுகான், அனில் சின்ஹா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நர்சிங் கல்வி பயின்று வரும் மாணவி கடந்த திங்ட்கிழமை தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு விடுதிக்கு திரும்பியுள்ளார்.அப்போது இதற்காக பல்கலைக்கழகத்துக்கு அதாவது பர்லிங்டன் பகுதிக்கு டிரைவர் உள்பட 4 பேர் இருந்து ஷேர் ஆட்டோவில் அந்த மாணவி ஏறியுள்ளார்.
இந்நிலையில், பாதி வழியில் ஆட்டோ சென்றபோது ஆட்டோவை ஓட்டிய டிரைவர் கீழே இறங்கி பயணிகள் இருக்கையில் அமர்ந்து மற்றொரு நபரை ஓட்டசெய்துள்ளார். அப்போது திடீரென டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த அனைவரும் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி உதவிகேட்டு அலறிய நிலையில் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார்.
அப்போது சாலையோரம் நின்ற நபர் அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் சத்யம் சிங், அவரது கூட்டாளிகள் ஆகாஷ்ம், ரஞ்சித் சவுகான், அனில் சின்ஹா ஆகியோரை போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆட்டோ டிரைவர் மீது கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருப்பது விசாரணையில், தெரியவந்துள்ளது.
English Summary
Sexual harassment in the auto a student jumps down and escapes