அசாமில் சோகம் : கார் விபத்தில் சிக்கி ஏழு கல்லூரி மாணவர்கள் பலி.!
seven college student died for accident in assam
அசாமில் சோகம் : கார் விபத்தில் சிக்கி ஏழு கல்லூரி மாணவர்கள் பலி.!
அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி ஜலுக்பரி பகுதியில் நேற்று இரவு வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஏழு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
இதைபார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், விபத்தில் உயிரிழந்தது கல்லூரி மாணவர்கள் என்றும், மாணவர்கள் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வேன் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
seven college student died for accident in assam