தமிழகத்துக்கு வரவேண்டிய செமி கண்டக்டர் ஆலை குஜராத்துக்கு கைமாறியுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு வர வேண்டிய செமி கண்டக்டர் ஆலைகள் குஜராத்திற்கு கைமாறிவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டில் 04 செமிகண்டக்டர் தயாரிப்பு திட்டங்களுக்கு அனுமதி அளித்தது. 

இதுதொடர்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தெலங்கானாவில் செமி கண்டக்டர் ஆலை அமைக்க முன்னணி தனியார் நிறுவனம் விண்ணப்பம் சமர்பித்துள்ளது. ஆனால், அந்த ஆலை ஆந்திராவிற்கு இடம்பெயர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கீகரிக்கப்பட்டது.

இதற்கு முன்பே இவ்வாறு ஆலைகள் வலுக்கட்டாயமாக வேறு மாநிலங்களுக்கு இடமாற்றபட்டுள்ளது. அதில் 02 முன்மொழியப்பட்ட இடமான தெலுங்கானாவிலிருந்து குஜராத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதேபோல், தமிழ்நாட்டிற்காக திட்டமிடப்பட்ட மற்றொரு தொழிற்சாலை குஜராத்திற்கு மாற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒப்புதல் பெறப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். 

இது பற்றி இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமா..? இந்தியாவை வலிமையாக்கும் மாநிலங்களுக்கு இடையிலான போட்டி இருப்பது  பற்றி பிரதமர் பேசுகிறார். ஆனால், நடுவர் மிகவும் வெளிப்படையாக ஒரு சார்புடையவராக இருந்தால், போட்டி ஒரு கேலிக்கூத்தாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Semiconductor plant to come to Tamil Nadu has been shifted to Gujarat says Jairam Ramesh


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->