பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்...சுற்றி வளைத்த பாதுகாப்புப் படை! மணிப்பூரில் பரபரப்பு சோதனையில் ஆயுதங்களுடன் சிக்கிய 6 பயங்கரவாதிகள் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கிடையே வெடித்த மோதல், பின்னர் கடுமையான வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. நிலைமை கட்டுக்குள் வராத சூழலில், மத்திய அரசு அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் தீவிரமாக களமிறக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வன்முறை சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. பின்னர், சூழ்நிலை ஓரளவு சீரடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது.

அதேநேரத்தில், மணிப்பூரில் செயல்பட்டு வரும் ஆயுத அமைப்புகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியிலும் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு இம்பால், டென்கினொபல் மற்றும் தவ்பெல் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

பல்வேறு மறைவிடங்களில் பதுங்கியிருந்த 6 பயங்கரவாதிகளை அவர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர்.மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Security forces surround terrorists ambush 6 terrorists caught weapons sensational raid Manipur arrested


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->