மக்களுக்கு சேவை செய்ய அரசு தரும் தொகை இவ்வளவா...? வாயடைத்துப் போக வைக்கும் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சம்பளப் பட்டியல் இதோ - Seithipunal
Seithipunal


ஜனநாயகத்தின் அடித்தளமாக திகழும் இந்தியாவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஊதியத்துடன் பல்வேறு சலுகைகள் மற்றும் படித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து சேவை செய்யும் பொறுப்பில் இருந்தாலும், அவர்களின் நிர்வாக மற்றும் பொதுப்பணிகளை முன்னெடுக்க இந்த ஊதிய அமைப்பு செயல்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள் ஒரே மாதிரியாக இருக்கும் நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ஊதிய அமைப்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டு காணப்படுகிறது.அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் மாத ஊதியம் முதலில் ரூ.25 ஆயிரமாக இருந்தது. பின்னர் 2008-ஆம் ஆண்டு அது ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு ரூ.50 ஆயிரமாகவும், 2011-ஆம் ஆண்டு ரூ.55 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டது.

இதற்கிடையில், 2017-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தும் முக்கிய முடிவை எடுத்தார். அந்த நடைமுறையே தற்போது வரை தொடர்கிறது.

மேலும், எம்.எல்.ஏ.க்களின் ஊதிய விதிகளில் கடந்த 2024 மே 21-ஆம் தேதி திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த விதிகளின்படி முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.30 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் பல்வேறு படித்தொகைகள் மற்றும் சிறப்பு சலுகைகளும் இணைக்கப்பட்டுள்ளதால் மொத்த மாத ஊதியம் உயர்கிறது.தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருக்கு மாதந்தோறும் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனுடன் அரசு வீடு, அதிகாரப்பூர்வ வாகனம் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அதேபோல் அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மாதம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. அமைச்சர்களுக்கு கூடுதலாக அரசு வீடும், அதிகாரப்பூர்வ காரும் வழங்கப்படுகின்றன.இந்த மாத ஊதியத்தில் மாதாந்திரப் படி ரூ.10 ஆயிரம், தொகுதிப்படி ரூ.25 ஆயிரம், அஞ்சல் செலவுக்காக ரூ.2,500, தொலைபேசி செலவுக்காக ரூ.7,500, தொகுப்பு படி ரூ.5 ஆயிரம் மற்றும் வாகனப் படி ரூ.25 ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு தொகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாமல், எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச மருத்துவ வசதி, விமானம், ரெயில் மற்றும் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

மேலும், தனிப்பட்ட அலுவலகம் நடத்துவதற்கான வசதி மற்றும் உதவியாளரை நியமிப்பதற்கான செலவுத்தொகையும் வழங்கப்படுகிறது.அத்துடன், சட்டமன்ற கூட்டத்தொடர்கள் அல்லது துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொரு நாளுக்கும் தினசரி படியாக ரூ.2,500 வரை தனியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

this amount government gives serve people Here list salaries Tamil Nadu Chief Ministers and Ministers that leave speechless


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->