அதிர்ச்சி விபரீதம்...! உடல் பருமன் கேலிக்கு பலியான இளம்பெண்...! தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்...! - Seithipunal
Seithipunal


பெங்களூரு புறநகர் மாவட்டத்தின் நெலமங்களா தாலுகாவிற்கு உட்பட்ட மாதநாயக்கனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமண். இவரது மனைவி சிவலீலா.

காதலித்து வந்த இவர்கள், பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை தொடங்கியிருந்தனர்.

திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாததால், குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, சிவலீலாவின் உடல் பருமனை காரணம் காட்டி, அவரால் குழந்தை பெற முடியாது என லட்சுமண் தொடர்ந்து மனவேதனை அளிக்கும் வகையில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த அவமானங்களாலும், தொடர்ச்சியான மனஉளைச்சலாலும் கடும் விரக்தியடைந்த சிவலீலா, நேற்றுமுன்தினம் இரவு வீட்டிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking tragedy young woman who victim fat joke tragedy suicide by hanging


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->