பரபரப்பு ...!பெங்களூருவில் பாதுகாப்பு அலாரம்: விடுதி அருகே பெண் டாக்டர் மீது பாலியல் தாக்குதல்...!
Security alarm Bengaluru Female doctor harassement assaulted near hostel
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் சிக்கபனவரா பகுதியில் அமைந்துள்ள மகளிர் விடுதியில் தங்கி பணியாற்றி வந்த பெண் டாக்டர், பணி முடித்து இரவு நேரத்தில் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
விடுதியின் நுழைவாயிலுக்கு அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வழி கேட்பது போல பேச்சு கொடுத்து, அவரை கவனச் சிதறடையச் செய்துள்ளார்.

அவரை தவிர்த்து விடுதி கதவை திறக்க முயன்ற அந்த பெண் டாக்டரை, அந்த இளைஞர் திடீரென பிடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பெண் டாக்டர் கூச்சலிட்டதையடுத்து, குற்றவாளி உடனடியாக இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றான்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, துமகுரு மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் என்பவரை அடையாளம் கண்டனர்.
பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் பெங்களூரு நகரில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Security alarm Bengaluru Female doctor harassement assaulted near hostel