அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - எந்த மாவட்டத்தில் தெரியுமா?
schools holiday in kanniyakumari for rain
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - எந்த மாவட்டத்தில் தெரியுமா?
தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாடகளாகவே மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்தது.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றுத் தெரிவித்துள்ளது.
அதன் படி, நேற்று நள்ளிரவு முதலே தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனழையினால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
schools holiday in kanniyakumari for rain