வாட்டி வதைக்கும் வெப்பம்..! பாட்னாவில் ஜூன் 28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை...! - Seithipunal
Seithipunal


பாட்னாவில் கோடை வெப்பம் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 28ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் வெப்பச்சலனம் காரணமாக பாட்னாவில் பள்ளிகள் ஜூன் 24 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் நீடிப்பதால் வருகின்ற 28ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையில் பாதகமான விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பாதால், அங்கன்வாடி மையம் முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகின்ற 28ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பாட்னா மாவட்ட நீதிபதி டாக்டர் சந்திரசேகர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பீகாரில் தொடக்கத்திலிருந்து கோடை வெப்பம் வாக்கு வதைத்து வந்த நிலையில் இந்த மாத துவக்கத்தில் கயா மாவட்டத்தில் அதீத வெப்பத்தால் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Schools closed in Patna till 28th due to heat


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->