பூஜா கேத்கர் என்ன கொலையா செய்துவிட்டார்? முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!
SC Order Pooja case UPSC Delhi police
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு முன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் புணேவில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக இருந்த பூஜா, பிற்படுத்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவில் தகுதி இல்லாமலே தேர்வில் கலந்து கொண்டு அதனை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டது.
இதையடுத்து டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் அவரின் UPSC தேர்ச்சி ரத்து செய்யப்பட்டதுடன், அவர் மீது அரசு வேலைக்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி பூஜா தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையில், “அவர் கொலைக்காரருமில்லை, பயங்கரவாதியுமல்ல. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடவில்லை. எந்தவிதமான தீவிர குற்றமும் இல்லாமல், ஏற்கனவே வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பை சந்தித்திருக்கிறார். இனி எந்த அரசு வேலையும் கிடைக்காது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட டெல்லி காவல்துறை மற்றும் யுபிஎஸ்சி, அவருக்கு பிணை வழங்க கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இருந்தும், குற்றம் நெருக்கடியானதாக இல்லையென கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் பூஜாவுக்கு முன்பிணை வழங்கப்படும் என உத்தரவிட்டது.
English Summary
SC Order Pooja case UPSC Delhi police