கொலீஜியம் நடைமுறை சிறந்த நடைமுறை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்! - Seithipunal
Seithipunal


நீதிபதிகளை நியமிக்கக் கூடிய கொலீஜியம் நடைமுறை சிறந்த நடைமுறையாக திகழ்கிறது என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக உள்ள கொலீஜியம் நடைமுறையை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், இது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில், நாட்டில் உள்ள பல நடைமுறைகள் சரியானதாக இல்லாவிட்டாலும், நாம் உருவாக்கிய மிக சிறந்த நடைமுறையாக கொலீஜியம் நடைமுறை திகழ்கிறது.

நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டை பாதுகாக்க, நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலீஜியம் முறை பாதுகாக்கப்பட வேண்டும்" என்று தனது கருத்தினை பதிவு செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC Head Judge Say About Collegium


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal