நீர்நிலை பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ இரா. அருள் உறுதி.! - Seithipunal
Seithipunal


மழைக்காலம் நிறைவு பெற்றதும், எனது தொகுதிக்கு உட்பட்ட ஏரிகள் அனைத்தும் தூர்வாரப்படும். ஏரிகளின் வாய்க்கால் பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ தெரிவித்தார்.

சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள், இன்று காமலாபுரம் ஏரியில் இருந்து புளியம்பட்டி வாய்க்கால் வழியாக உள்ள செல்லப்பிள்ளைகுட்டை ஏரி, முத்துநாயக்கன்பட்டி ஏரி, செம்மண்கூடல் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் ஓமலூர் புளியம்பட்டியில் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு இருப்பதை நேரில் சென்று பார்வையிட்டார். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இரா. அருள், "சேலம் மேற்கு தொகுதியில் புளியம்பட்டி வாய்க்கால் வழியாக உள்ள செல்லப்பிள்ளைகுட்டை ஏரி, முத்துநாயக்கன்பட்டி ஏரி, செம்மண்கூடல் ஏரிகள் பெரிய எரிகளாக இப்பகுதியில் உள்ளது. 

இவற்றுக்கு நீர் வரத்து வாய்க்களாக புளியம்பட்டி வாய்க்கால் உள்ளது. இந்த புளியம்பட்டி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, நீர் வரத்து தடைபட்டுள்ளது. புளியம்பட்டி சுடுகாட்டில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனையடுத்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடைப்பை சீர் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். வரும் நாட்களில் நீர்களை சேகரித்து, நீர் நிலைகளை பாதுகாத்தால் மட்டுமே கோடை காலங்களில் நீர் கிடைக்கும். 

மழைக்காலம் நிறைவு பெற்றதும், எனது தொகுதிக்கு உட்பட்ட ஏரிகள் அனைத்தும் தூர்வாரப்படும். ஏரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். பல ஏரிகளின் நீர் வரத்து வாய்க்கால் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. அவை மீட்கப்படும்" என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem West Constituency MLA R Arul Pressmeet 21 Oct 2021


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal