ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை! ராஷ்டிரபதி பவனில் மரியாதை, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து...!
Russian President Putin visits India Respected at Rashtrapati Bhavan important agreements signed
டெல்லியில் இன்று நடக்கவிருக்கும் 23வது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, ரஷிய அதிபர் வலாதிர் புதின் இரு நாள் பயணத்துக்காக நேற்று மாலை இந்தியா வருகை தந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை பிரதமர் மோடி நேரில் சென்று மரியாதையுடன் வரவேற்றார்.

விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் அனுபவித்து, கலைஞர்களை வாழ்த்தினர். பின்னர் ஒரே காரில் விமான நிலையத்தை விட்டு கிளம்பிய பிரதமர்-அதிபர் ஜோடி, பிரதமர் மோடியின் இல்லத்தில் சிறப்பு இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.
இந்த பயணத்தின் பகுதியாக, புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மரியாதைச் செலுத்தினர்.
பின்னர் புதின், ராஷ்டிரபதி பவனில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.அதன்பின்னர் புதின் பிரதமர் மோடியுடன் ஐதராபாத் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப்பட்டன.
மேலும், மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். உச்சிமாநாட்டுக்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் புதின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Russian President Putin visits India Respected at Rashtrapati Bhavan important agreements signed