மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.2,500 அபராதம்; ரயில்வேயின் புதிய விதிமுறை அமல்..! - Seithipunal
Seithipunal


ரயில்வே செயல்​பாடு​களை வலிமைப்​படுத்​த​வும், பயணி​களின் ஒழுக்​கத்தை மேம்​படுத்​து​வும் வகை​யில், ரயில்வே சட்​டம் 1989-இன் படி, பல விதி​கள் திருத்​தப்​பட்​டுள்​ளன.

அதன்படி, இனிவரும் காலங்களில் ர​யில்​களில் மகளிர் பெட்​டி​யில் ஆண்​கள் அனு​ம​தி​யின்றி நுழைந்​தாலோ அல்​லது பயணித்​தாலோ விதிக்கப்பட்ட அபராதம் ரூ.500-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்​டுள்​ளது. இந்த புதிய விதி​முறை​கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

இது த​விர, ரயில்​களில் உரிய டிக்​கெட் இல்​லாமல் பயணிப்​போர் மீது, முன்பு ரூ.250 அபராதம் விதிக்​கப்​பட்​டது.த ற்போது இந்த தொகை, ரூ.500 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இது குறித்​து, ரயில்வே அதி​காரி​கள் தெரிவித்துள்ளதாவது;

ரயில்வே சட்டம் 1989-இன் படி, விதி​மீறல்​களுக்கு விதிக்​கப்​படும் அபராத தொகை ரூ.500-இல் இருந்து அதி​கபட்​ச​மாக ரூ.5,000 வரை உயர்த்தப்பட்​டுள்​ளன. அதன்​படி, ரயில் நிலை​யங்​களில் அனுமதியின்றி விற்​பனை செய்​தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​படும் என்றும், இதை செலுத்த மறுத்​தால், நீதி​மன்​றம் வாயி​லாக ரூ.05 ஆயிரம் வரை அபராதம் செலுத்​தும் வகை​யில் மாற்​றம் செய்யப்​பட்​டுள்​ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோன்று, பெண்​களுக்​கான பெட்​டிகளில் ஆண்​கள் பயணித்​தால் ரூ.2,500-ஆம் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. ரயி​லில் புகைப் பிடித்​தால் ரூ.02 ஆயிர​மும், மாற்​றுத் திற​னாளி​கள் பெட்​டி​யில் பயணித்​தால், ரூ.02 ஆயிர​மும் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. இது த​விர, ரயில்​களில் அபாயகர​மான பொருட்​களை எடுத்து சென்​றால், ரூ.02 ஆயிரம் முதல் 05 ஆயிரம் வரை வி​திக்​கப்​பட்​ட அபராதம் ரூ.10 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 2500 fine for men traveling in womens train compartments


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->