மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் வழக்கு; போலீசார் அதிரடி சோதனை; சிக்கிய ரூ.2.5 கோடி ரொக்கம்..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து கடத்தல் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டத்தில் சுமார் ரூ.2.5 கோடி ரொக்கம் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஜூலை 05-இல், தடை செய்யப்பட்ட 1,500 இருமல் மருந்து பாட்டில்களுடன் 04 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், கிடைத்த தகவல்களின் அடிப்படையில், காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் மால்டா மற்றும் தெற்கு தினாஜ்பூர் மாவட்ட காவல் துறையினருடன் இணைந்து, மால்டா மங்கல்பாரி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் சோதனை நடத்தினர்.

இதன்போது, ஏற்கனவே, கைது செய்யப்பட்ட 04 பேரையும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்றிருந்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்து கட்டுக்கட்டாகப் ரொக்க பணம் பணம் சிக்கியது. அதனை எண்ணுவதற்கு 03 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், முதற்கட்டமாக ரூ.2.5 கோடிக்கும் அதிகமான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பணம் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பறிமுதல் தொகை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன்,  அந்த வீட்டில் இவ்வளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என குற்றம் சாட்டப்பட்டுள்ள பிந்து சர்க்கார் என்பவர் கூறியுள்ளார். மேலும் இந்த பணத்தின் பின்னணி மற்றும் கடத்தல் வலையமைப்பு குறித்து தற்போது காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 25 million cash seized in Malta cough medicine smuggling case by police in raid


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->