நடு ரோட்டில் இளம்பெண் செய்த வேலை.! வெளியான சிசிடிவி காட்சியால் அம்பலமான உண்மை.! - Seithipunal
Seithipunal


நடு ரோட்டில் இளம்பெண் ஒருவர் ஓட்டுனரை கன்னத்தில் அறையும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

லக்னோவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், தன் மீது காரை ஏற்ற முயன்ற வாகன ஓட்டுனரை இளம்பெண் ஒருவர் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இளம்பெண் ஒருவர் சிக்னலின் போதே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அருகே வரும் கார் ஒன்று சிக்னலை நிற்கிறது. அந்த இளம்பெண் கார் ஓட்டுனரை தாக்குகிறார். 

சமூக வலைத்தளங்களில் கார் ஓட்டுனரை இந்த இளம்பெண் தாக்கும் காட்சிகள் முதலில் வெளியாகிய நிலையில், தற்போது இதற்கான உண்மை நிலவரம் என்ன என்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

முதலில் வெளியான காணொளியில் கார் தன் மீது மோதி விட்டதாக கூறி ஓட்டுநரை அந்த இளம்பெண் தாக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது இரண்டாவதாக வெளியாகிய சிசிடிவி காட்சியில், அந்த இளம்பெண் மீது கார் மோதல் இல்லை என்பதும், அதற்கு முன்பே ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் பிடித்து நிறுத்தி விட்டார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அந்த இளம் பெண் கார் அதிவேகமாக வருவதை அறிந்தும், அப்படியே சிலை போல் நின்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், ஒரு தரப்பினர் அந்தப் பெண் கொடுத்த புகாரை போலீசார் அதனை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இன்னொரு தரப்பினர் ஓட்டுநர் மீதுதான் தவறு உள்ளது என்ற வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

road cctv footage viral


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal