ரிஸ்க் தேடும் தலைவன்: பதவி விட்டு புதிய பயணம் தொடங்கும் zomato CEO தீபிந்தர்...!
risk seeking leader Zomato CEO Deepinder leaving his position begin new journey
இந்திய டெக் - டெலிவரி உலகில் முக்கிய திருப்பமாக, சொமேட்டோ மற்றும் பிளிங்கிட் நிறுவனங்களின் தாய் நிறுவனமான எடர்னல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து தீபிந்தர் கோயல் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நிறுவனத்தின் வளர்ச்சி பயணத்தில் முக்கிய பங்காற்றிய அவர், இனி குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் இயக்குநராக தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, பிளிங்கிட் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓவாக செயல்பட்டு வரும் அல்பிந்தர் சிங் திண்ட்ஸா, வரும் பிப்ரவரி 1 முதல் எடர்னல் குழுமத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
இந்த நியமனம், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி பாதையில் புதிய அத்தியாயம் தொடங்கும் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.தீபிந்தர் கோயல் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில்,“எடர்னல் எப்போதும் என் வாழ்நாள் பணியாகவே இருக்கும். இந்த நிர்வாக மாற்றம் நிறுவனத்தின் வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்காது,” என உறுதியளித்துள்ளார்.
மேலும், தனது விலகல் குறித்து விளக்கமளித்த அவர்,“எடர்னல் போன்ற பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் தலைமை பொறுப்பு முழுமையான கவனமும் ஒழுங்குமுறைகளுக்கும் கடும் கட்டுப்பாடும் தேவைப்படுகிறது.
ஆனால் இப்போது அதிக அபாயம் மற்றும் சோதனை நிறைந்த புதிய யோசனைகளை ஆராய விரும்புகிறேன். அவற்றை நிறுவனத்தின் எல்லைக்குள் அல்லாமல், வெளியே இருந்து செயல்படுத்துவது சிறந்தது என தோன்றியது” என கூறியுள்ளார்.
இந்த நிர்வாக மாற்றம், இந்திய டிஜிட்டல் டெலிவரி துறையில் புதிய இயக்கத்தை உருவாக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
English Summary
risk seeking leader Zomato CEO Deepinder leaving his position begin new journey