மீண்டும் மீண்டும் வரதட்சணை அவலம்! உணவு கொடுக்காமல் 2 வருடம் எலும்பு கூடாக மாறும் வரை பல கொடுமை, சித்திரவதை...! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் கம்பம் மாவட்டம் கல்லூர், முடிச்சாவரத்தை சேர்ந்த 33 வயதான 'லட்சுமி பிரசன்னா' என்பவரின் கணவர் 'நரேஷ் பாபு'. கடந்த 2015-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. அந்த திருமணத்தின் போது ரூ.10 லட்சம் ரொக்க பணம், 2 ஏக்கர் மாந்தோப்பு மற்றும் ஒரு ஏக்கர் விவசாய நிலம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது . அப்போது நரேஷ் பாபு மனைவி மற்றும் குழந்தையுடன் 6 ஆண்டுகள் மாமியார் வீட்டில் வசித்தார்.அதன் பிறகு அஸ்வராபேட்டையில் இருக்கும் சகோதரி பூ லட்சுமி வீட்டிற்கு குடி ஏறினார். இதில் கடந்த 2 ஆண்டுகளாக மனைவி லட்சுமி பிரசன்னாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு உணவு கொடுக்காமல் கொடுமை செய்துள்ளார்.

மேலும், வீட்டில் சிறை வைத்து உடல் முழுவதும் சூடு வைத்து சித்ரவதையும் செய்துள்ளார்.இதனால் எலும்பு கூடாக மாறிய லட்சுமி பிரசன்னாவின் உடல் பார்க்கவே கோரமாக இருந்தது. இதனிடையே, நேற்று முன்தினம் மாமனாருக்கு போன் செய்த நரேஷ் பாபு," உங்களது மகள் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால் ராஜ மகேந்திரவரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக" தெரிவித்தார்.

இதனைக் கேட்டு துடித்துப்போன லட்சுமி பிரசன்னாவின் பெற்றோர் பதறிக்கொண்டும் அலறிஅடித்துக்கொண்டும்  மருத்துவமனைக்கு சென்றனர்.அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் லட்சுமி பிரசன்னா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அங்கு அடையாளம் காண முடியாத அளவு லட்சுமி பிரசன்னாவின் உடல் மெலிந்து எலும்பாக இருந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

அவரது உடல் முழுவதும் ஏற்கனவே சூடு வைத்து ஆறிப்போன அடையாளங்களும் புதியதாக சூடு வைத்ததற்கான அடையாளங்களும் இருந்தது.இதுதொடர்பாக வெங்கடேஸ்வர ராவ் காவலில் புகாரளித்தனர்.மேலும்,காவலர்கள் மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் நரேஷ் பாபு, தாய் விஜயலட்சுமி, மைத்துனர் சீனிவாச ராவ் ,அவரது சகோதரி பூ லட்சுமி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Repeated dowry woes Many cruelties and tortures until she turns skeleton two years without being given food


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->