அதிரடி! இந்தியாவில் ஒவ்வொரு மூளைக்கும் ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ் வரும்...! - முகேஷ் அம்பானி
Reliance Intelligence come every corner India Mukesh Ambani
பிரபல பணக்காரரான 'முகேஷ் அம்பானி', அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அளிப்பதற்காக 'ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்' என்ற நிறுவனம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.இதனிடையே டெல்லியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடந்தது.

அப்போது நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்ததாவது,"கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, ரிலையன்சுக்கு டிஜிட்டல் சேவைகள் ஒரு புதிய வளர்ச்சி எந்திரமாக இருந்தது. தற்போது, எங்களுக்கு முன்பு உள்ள வாய்ப்பாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு இருக்குறது.
அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கிடைப்பதற்காக 'ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்' என்ற முழுக்க முழுக்க எங்களுக்கு சொந்தமான துணை நிறுவனம் உருவாக்கப்படுகிறது.இந்தியாவில் பிரமாண்ட அளவில் ஏ.ஐ. உள்கட்டமைப்பை ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் உருவாக்கும்.
பசுமை ஆற்றலால் இயக்கப்படும் ஜிகாவாட் அளவிலான, ஏ.ஐ. தயார் தரவு மையங்களை அமைக்கும். ஜாம்நகரில் ஏற்கனவே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. இந்தியாவின் வளரும் தேவைகளுக்கு ஏற்ப இந்த வசதிகள் படிப்படியாக வழங்கப்படும்.வாடிக்கையாளர்கள், சிறு வணிகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நம்பகமான, பயன்படுத்துவதற்கு எளிதான ஏ.ஐ. சேவைகளை ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் வழங்கும்.
ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவான விலையில் சேவை கிடைக்கும்.ஏ.ஐ.யின் அற்புதமான சக்தியை 'புதிய காமதேனு' என்று சொல்லலாம்" என்று தெரிவித்தார்.இது தற்போது பொதுமக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Reliance Intelligence come every corner India Mukesh Ambani