கனடாவில் உயிரிழந்த இந்திய வாலிபர் - உடலை மீட்டுத்தர கோரி கதறும் உறவினர்கள்.!
relatives request to rescue youth body died in canada
கனடாவில் உயிரிழந்த இந்திய வாலிபர் - உடலை மீட்டுத்தர கோரி கதறும் உறவினர்கள்.!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராய்கோட் பகுதியில் சிலோவானி கிராமத்தைச் சேர்ந்தவர் மாக் சிங்கின் மகன் ஜஸ்விந்தர் சிங். இவர் குடும்ப சூழ்நிலைக் காரணமாக கனடாவில் உள்ள பிராம்ப்டனுக்குச் சென்று அங்கு தனது நண்பர்களுடன் அஃபோர்ட் நகரில் வசித்து பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், ஜஸ்விந்தர் கடந்த மாதம் 27-ம் தேதி வேலை முடிந்து தனது அறைக்கு வந்து தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜஸ்விந்தரின் மைத்துனர் மன்பிரீத் சிங் தெரிவித்ததாவது, "ஜஸ்விந்தர் சிங் கனடாவில் வேலையில்லாமல் சில காலம் தவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் அதற்காக வான்கூவரில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
ஆகஸ்ட் 28-ம் தேதி வேலைக்குச் சென்று விட்டு வந்தவர், தான் தங்கியிருந்த அறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரின் உடலை இந்தியா கொண்டு வர எங்களிடம் போதுமான நிதியில்லை.
ஆகவே, ஜஸ்விந்தர் சிங் உடலை இந்தியாவிற்கு அனுப்பிட கனடா அரசு உதவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். குடும்ப சூழ்நிலைக்காக கனடாவிற்கு பிழைப்புத் தேடிச் சென்ற இந்திய வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ராய்கோட் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
relatives request to rescue youth body died in canada