சர்ச்சை மேல் சர்ச்சை.. லிவிங் டுகெதர் கணவனுடன் பிரிவு?..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியை சார்ந்தவர் ரெஹானா பாத்திமா. கொச்சியில் உள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரெஹானா பாத்திமா, மாடல் அழகியாகவும் இருந்து வந்தார். கேரளாவில் நடைபெற்ற முத்த போராட்டத்தில் கலந்துகொண்டு, பலருக்கும் முத்தம் கொடுத்ததன் எதிரொலியாக பிரபலமடைந்தார். 

இதனைத்தொடர்ந்து மாதவியாய் அசுத்தம் கிடையாது என்று கூறி போராட்டம் செய்த நிலையில், ஐயப்ப பக்தர்கள் போன்று உடையணிந்து முகநூலில் பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும், ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல போவதாக பஞ்சாயத்து செய்திருந்தார். 

சபரிமலைக்கு இருமுடி என்ற பெயரில், பெண்கள் பயன்படுத்தும் நாப்கினை வைத்து சென்றதும் தெரியவந்த நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், குழந்தைகளை வைத்து தனது உடலில் படம் வரையவிட்டு சர்ச்சையில் சிக்கிய நிலையில், இவ்வாறாக பல்வேறு வழக்குகள் ரெஹானா பாத்திமாவின் மீது பதிவு செய்யப்பட்டது.

அடுத்தடுத்த புகாரின் எதிரொலியாக பி.எஸ்.என்.எல் பணியும் பறிபோன நிலையில், தற்போது மனோஜ் ஸ்ரீதர் என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர். மேலும், இருவரும் பிரிந்தாலும், குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரே இல்லத்தில் வசிக்கப்போவதகவும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rehana Fatima May be Divorce with Living Together Husband


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->