'ஆப்ரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைக்கக் காரணம் என்ன?
reason for naming it Operation Sindoor
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் -பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ''ஆப்ரேஷன் சிந்தூர்'' என்ற பெயரில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் இந்தியா கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.மேலும் இந்திய ராணுவம், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அதிரடியாக அழித்துள்ளது.
இதில் இந்திய ராணுவம், பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைக்கு 'ஆப்ரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்துள்ளது.இந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 25 பெண்களின் கணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் கணவர்களை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் ''ஆப்ரேஷன் சிந்தூர்'' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில்,கணவர்களை இழந்து சிந்தூர் என இந்தியில் அழைக்கப்படும் சிவப்பு பொட்டை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் ''ஆப்ரேஷன் சிந்தூர்'' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
English Summary
reason for naming it Operation Sindoor