கோவில் கருவறைக்குள் குழந்தை ராமர் சிலை.!! - Seithipunal
Seithipunal


வரும் ஜனவரி 22 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோதியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் விழா கோலகாலமாக நடைபெற உள்ளது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து பல முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

கோவில் கருவறைக்குள் ராமர் சிலை நிறுவுவதற்கு முன்பு நடத்தப்படும் சிறப்பு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சுமார் 121 ஆச்சாரியார்கள் இந்த சடங்குகளை மேற்கொண்டனர்.

வரும் ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 12:20 மணியளவில் தொடங்கும் பூஜை 1:00 மணி வரை நடைபெறும் என தெரிய வருகிறது. இந்த நிலையில் அயோதியில் உள்ள ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ள குழந்தை ராமர் சிலை கருவறைக்குள் நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது. 

கிரேன் உதவியுடன் ராமர் சிலை கருவறைக்குள் வைக்கப்பட்டதற்கு முன்பாக சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பதில் நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தர் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ram statue placed in side ayodya temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->