'மத்திய அரசு- அமெரிக்கா தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது'; பி.ஆர்.பாண்டியன் கருத்து..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவுடன், மத்திய அரசு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜூன் 23, 24 ,25 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில், 25-ஆம் தேதி ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சமியுத்த கிசான் மோர்ச்சா தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்கித்சிங் தல்லேவால் தலைமை தாங்கினார்.

இந்தப் போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணப்புக் குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்துக்கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது; ஏற்கெனவே ஒப்பந்தம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராடி வருகின்றனர் எங்கு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவசாயிகள் இந்தியாவில் உற்பத்தி செய்கிற பொருட்களை வரியின்றி தடையின்றி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து சந்தைப்படுத்தி கொள்வதற்கு வழிவகுக்கும் என்றும், நாடாளுமன்றத்தில் வர்த்தக ஒப்பந்தம் குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு மத்திய அரசு அனுமதிக்க முன்வரவில்லை எனவும், இந்திய விவசாயிகளிடமும் கருத்து கேட்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் தன் விருப்பத்திற்கு மத்திய அரசு, அமெரிக்காவோடு தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து வேளாண் உற்பத்தி பொருட்களை தடையில்லாமல் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுக்க வேண்டும் எனவும், விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தப் போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் சார்பில்  அபிமன்யூ கொஹார், கிருஷ்ணகிரி பால சிவபிரசாத் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PR Pandian has expressed the view that the free trade agreement negotiations between the Central Government and the United States have sparked concerns


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->