டிரேட் விண்டோ; மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பிய ரிஷப் பந்த்; லக்னோ அணியில் இணைந்துள்ள குல்தீப் யாதவ்..!
Rishabh Pant returns to the Delhi team and Kuldeep Yadav joins the Lucknow team
கடந்த 2025 ஐபிஎல் சீசனில் ரூ.27 கோடிக்கு ஏலத்தின் மூலம் ரிஷப் பந்த்தை எல்எஸ்ஜி அணி ஒப்பந்தம் செய்தது. தொடர்ந்து அணியின் கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டார்.
2026-ஆம் ஆண்டுக்கான சீசன் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரையில் நடைபெற்றது. இதில் லக்னோ அணியின் கேப்டனாக மீண்டும் ரிஷப் பந்த் செயல்பட்டார். அந்த அணி லீக் சுற்றில் கடைசி இடம் பிடித்து, முதல் சுற்றோடு வெளியேறியது. அந்த தொடரில் மொத்தமாக 04 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தது.
2026 சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் பந்த் விலகுவதாக அறிவித்தார்.

பந்த் கடந்த 2025 மற்றும் 2026 என இரண்டு ஐபிஎல் சீசனிலும் மொத்தமாக 28 ஆட்டங்களில் விளையாடி 581 ரன்கள் மாத்திரமே எடுத்தார். அவர் தலைமையிலான எல்எஸ்ஜி அணி, 28 ஆட்டங்களில் விளையாடி 10-இல் மட்டுமே வெற்றி பெற்றது.
28 வயதான பந்த், கடந்த 2016 சீசன் முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 111 ஆட்டங்களில் விளையாடி 3,284 ரன்கள் எடுத்துள்ளார்.
டிரேட் விண்டோ மூலம் தற்போது ரூ.15 கோடிக்கு அவர் ஒப்பந்தம் ஆகி மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளார். ஏற்கெனவே எல்எஸ்ஜி அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுலும் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து குல்தீப் யாதவ் ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2016 சீசன் முதல் சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். இதுவரை 110 ஆட்டங்களில் விளையாடி 112 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இப்போது ரூ.13.5 கோடிக்கு டெல்லி அணியில் இருந்து விலகி, எல்எஸ்ஜி அணியில் இணைந்துள்ளார்.
English Summary
Rishabh Pant returns to the Delhi team and Kuldeep Yadav joins the Lucknow team