விருதுநகரில் பிளஸ் 2 மாணவி ஆறு மாதம் கர்ப்பம்; ஆசிரியையின் அண்ணனுக்கு போலீசார் வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதி கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், அதே பகுதியில் உள்ள ஆங்கில ஆசிரியையிடம் கடந்த ஓராண்டாக டியூசனுக்கு சென்று வந்துள்ளார். அப்போது ஆசிரியையின் அண்ணன் சதீஷ்குமார் என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 06 மாதங்களுக்கு முன் ஒரு நாள், மாணவி வழக்கம் போல டியூசனுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார், திருமணம் செய்வதாக கூறி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே மாணவியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர், 06 மாதத்திற்கு முன் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். 

இதனையடுத்து மாணவி தற்போது 06 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து சதீஷ்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police are on the hunt for the brother of a female teacher who impregnated a Class 12 student in Virudhunagar


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->