ஓ.பி.சி. பிரச்சனை முன்பே அறியாமல் இருந்தது தவறுதான்: காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்கிறார் ராகுல் காந்தி..!
Rahul Gandhi says caste wise census will be conducted in all Congress ruled states
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் டெல்லியில் நடந்த ஓ.பி.சி மாநாட்டில் பேசியுள்ளதாவது:-
ஓ.பி.சி. பிரச்சனை முன்பே அறியாமல் இருந்ததும், அதனை உணராமல் போனது காங்கிரஸும் தானும் செய்த தவறு என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனை நீரு பூத்த நெருப்பாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது நிச்சயம் வெளிவரும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஓ.பி.சி. பிரச்சனையை அறிந்திருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் ஜாதிவாரி கணகெடுப்பு நடத்தியிருப்போம் என்றும் பிற்படுத்தப்பட்டோரின் வரலாறை நான் படிக்காமல் போனதற்கு வருந்துகிறேன் என்று பேசியுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் போனது எங்கள் தவறுதான். தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மோடி பற்றிய பிம்பத்தை ஊடகங்கள்தான் ஊதிப் பெரிதாக்கி விட்டது. மோடியின் தோற்றம்தான் பெரியதே தவிர சரக்கு ஏதும் இல்லை என விமர்சித்துள்ளார். மோடியிடம் ஒரே அறையில் தங்கி இருந்தபோது அவரை பற்றி அறிந்துக் கொண்டேன் என்றும், மோடி ஒரு பெரிய விஷயமே இல்லை; அவரிடம் பெரிய சக்தி எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் 90% உள்ள பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கு அதிகாரத்தில் பங்கில்லை என்றும், மக்கள் தொகையில் 90% தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், சிறுபான்மை மக்கள் ஆவர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
English Summary
Rahul Gandhi says caste wise census will be conducted in all Congress ruled states