மேகாலயாவில் திருமணத்திற்கு முன்பு எச்ஐவி பரிசோதனை சட்டம் பரிசீலனை! - சுகாதாரத் துறை அமைச்சர்
Meghalaya to review pre marital HIV testing law Health Minister
நேற்று மேகாலயா மாநில சுகாதாரத்துறை மந்திரி அப்பரீன் லன்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,"எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்திலுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அதிகம். எனவே திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற பரிசீலனை செய்து வருகிறோம்.
கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாமும் ஏன் அதை சட்டமாக்கக் கூடாது. இது சமுதாயத்துக்கு பெரும் பயன்தரும்" என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக மாநில துணை முதல்மந்திரி தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி பங்கேற்றார்.இந்தக் கூட்டத்தில் எய்ட்ஸ் சோதனையை ஒரு சட்டமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
English Summary
Meghalaya to review pre marital HIV testing law Health Minister