தேஜஸ்வி யாதவை கொலை செய்ய ஜேடியு - பாஜக கூட்டணி சதித்திட்டம்: பீஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு..!
Rabri Devi alleges that the JDU and BJP alliance is plotting to kill Tejashwi Yadav
தேஜஸ்வி யாதவை கொலை செய்ய ஆளும் ஜேடியு மற்றும் பாஜக கூட்டணி சதி செய்ததாக, அவரது தாயார் ராப்ரி தேவி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.பிஹார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி இது குறித்து கூறியுள்ளதாவது: "தேஜஸ்வியை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன. பிஹாரில் நிறைய கொலைகள் நடக்கின்றன. அதில் இதுவும் ஒரு கொலையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேஜஸ்வியை கொலை செய்வதற்கான சதியில் ஈடுபட்டது, ஈடுபட்டுக்கொண்டிருப்பது ஆளும் ஜேடியு - பாஜக கூட்டணிதான் என்று பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

பீகாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தேஜஸ்வியை களத்தில் இருந்து அப்புறப்படுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றும், தேஜஸ்வியை கொலை செய்ய குறைந்தது நான்கு முறை முயற்சிகள் நடந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ஒரு முறை லாரி ஒன்று அவரது வாகனத்தின் மீது மோதியது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதாகவும், இதை உணர்த்தவே தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து கொண்டு சட்டப்பேரவைக்கு வந்தார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் கருப்பு உடை அணிந்து வந்தமைக்கு முதல்வர் நிதிஷ் குமார் ஆவேசமானார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, சிவப்பு நிறத்தைக் கண்டதும் காளைகள் ஆவேசமடைவதைப் போல, நிதிஷ் குமாரின் ஆவேசம் இருந்தது எனவும், கருப்பு உடை அணிந்து வந்ததில் என்ன தவறு..? எங்கள் தரப்பில் தவறு இருந்தால் அதை அரசு நிரூபிக்கட்டும். நான் சவால் விடுகிறேன்" எனவும் ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில்இண்டியா கூட்டணி சார்பில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் முன்னாள துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்து, சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லாத 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Rabri Devi alleges that the JDU and BJP alliance is plotting to kill Tejashwi Yadav