கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!
punjab school leave Heavy rain fall
வட மாநிலங்களில் பருவமழை தீவிரமாக கொட்டிக் கொண்டிருக்கிறது. பஞ்சாபில் பெய்து வரும் கனமழை இதுவரை 29 பேரின் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது. மேலும், சுமார் 2.5 லட்சம் மக்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட முக்கிய ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக சீர்குலைந்துள்ளது. போக்குவரத்து சிக்கல்கள் அதிகரித்து, குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நிலைமை மோசமடைந்ததால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 7 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு விளக்கியுள்ளது.
பஞ்சாப்பில் கடந்த காலத்தில் நிகழ்ந்த கடுமையான வெள்ளப் பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ள நிவாரண பணிகளில் அரசு இயந்திரங்கள், காவல்துறை, தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதாகவும் அரசு உறுதி அளித்துள்ளது.
English Summary
punjab school leave Heavy rain fall