பஞ்சாப்: பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!
Punjab Fire Amritsar Saharsa Garib Rath Express
பஞ்சாபிலிருந்து பிகார் நோக்கி சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டதுடன், யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
அமிர்தசரஸில் இருந்து சஹர்சாவுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலின் 19வது பெட்டியில் திடீரென புகை எழுந்ததைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். சம்பவம் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே நடந்தது.
தகவல் கிடைத்தவுடன் ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, தீப்பற்றிய பெட்டிகளை ரயிலின் பிற பெட்டிகளிலிருந்து பிரித்தனர். அதே சமயம், சில பயணிகள் தாங்களே எச்சரிக்கையுடன் ரயிலிலிருந்து குதித்து உயிர்த் தப்பினர். அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் தீவிரமான காயங்கள் ஏற்படவில்லை.
தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும், மூன்று பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமடைந்தன. அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து முதற்கட்ட தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும், மின் கோளாறு அல்லது சமையல் சிலிண்டர் வெடிப்பு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பின்னர், பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள் வேறு ரயிலில் அவர்களின் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
English Summary
Punjab Fire Amritsar Saharsa Garib Rath Express