#BigBreaking | நாளை கல்லூரிகளுக்கும் விடுமுறை - சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
Puducherry Karaikal school college leave nov 2022
கடந்த மாதம் 29 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நேற்று (நவம்பர் 3ம் தேதி) மாணவர்களின் பாதுகாப்பு கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின், நாளையும் (நவம்பர் 4ம் தேதி) புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
சற்றுமுன் வெளியான ஒரு அறிவிப்பில் நாளை புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Puducherry Karaikal school college leave nov 2022