இனவெறிக்கு பலிகெடா மாணவர்களா? வெட்கப்பட வேண்டும் - காங்கிரஸ் தலைவர் ஆவேசம்! - Seithipunal
Seithipunal


மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தற்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது. 

கலவரத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. மேலும் காவல்துறையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது. 

மணிப்பூரில் கடந்த ஜூலை மாதம் ஃபிஜாம் ஹெம்ஜித் (வயது 20) மற்றும் ஹிஜாம் லிந்தோயின்காம்பி (வயது 17) ஆகிய 2 மாணவர்கள் காணாமல் போனார்கள்.

காணாமல் போன இருவரும் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் காணப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்த இந்த படுகொலை குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்திருக்கிறார். 

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது, இனப்படுகொலைகளில் குழந்தைகள் பலிகெடா ஆகின்றனர். 

அவர்களை காப்பதற்கு நம்மால் ஆன அனைத்து நடவடிக்கையும் செய்ய வேண்டியது நமது கடமை. தொடர்ந்து கொடூர கொலை குற்றங்கள் நடைபெற்று வருகிறது. 

இதற்கு மத்திய அரசு வெட்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் முதலமைச்சர் தெரிவிக்கையில், இந்த வழக்கு குறித்து மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

மணிப்பூர் காவல் துறை முழு ஒத்துழைப்பையும் கொடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Priyanka Gandhi condemns Centre inaction Manipur students death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->