உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி..!
Prime Minister Narendra Modi had a telephone conversation with Ukrainian President Zelensky
பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இன்று டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி "உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசுவதிலும், சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது பார்வைகளைக் கேட்பதிலும் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ''மோதலுக்கு முன்கூட்டியே மற்றும் அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை நான் தெரிவித்தேன். உக்ரைனுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இந்த விஷயத்தில் சாத்தியமான ஒவ்வொரு பங்களிப்பையும் செய்வதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.'' என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன்- ரஷியா இடையில் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறன்ற நிலையில், போர் நிறுத்தத்திற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், ரஷியா போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில், வருகிற வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டிரம்பை ரஷிய அதிபர் புதின் நேரடியாக சந்திக்கவுள்ளார். அப்போது போர் நிறுத்தம் குறித்து சுமுகமான முறையில் பேசி முடிவு எடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Prime Minister Narendra Modi had a telephone conversation with Ukrainian President Zelensky