அமைச்சரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள் - பீகாரில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மாவட்டம் மலாவன் கிராமத்தில் சனிக்கிழமை, கங்கையில் புனித நீராடச் சென்றபோது, ஆட்டோ ஒன்று வேகமாக வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் எட்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். 

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் மற்றும் எம்எல்ஏ கிருஷ்ணா முராரி சரண் உள்ளிட்டோர் ஆயுதமேந்திய காவலர்களுடன் கிராமத்திற்குச் சென்றனர்.

அப்போது அவரிடம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு அமைச்சர், “இந்த விவகாரம் பின்னர் விவாதிக்கப்படும்” என்று பதிலளித்துள்ளார். இதனால் கோபமடைந்த மக்கள், மூங்கில் குச்சிகள் மற்றும் கற்களுடன் அமைச்சர் மற்றும் எம்எல்ஏவை விரட்டினர்.

பாதுகாப்பு அதிகாரிகளும் கட்சித் தொண்டர்களும் அவரைப் பாதுகாக்க போராடினர். இந்தச் சம்பவம் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அமைச்சர் தனது வேட்டியைப் பிடித்துக் கொண்டு ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

peoples chased away minister shravan kumar in bihar


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->