உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி.! ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் லால்தாங் பகுதியிலிருந்து பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். 

அப்பொழுது மலைப்பாங்கான பகுதியில் இரவு 7.30 மணியளவில் சென்ற போது, சிம்ரி என்ற இடத்தில் உள்ள வளைவில், பேருந்து திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாடடை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பரிதாபமாக பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், பள்ளத்தாக்கில் இருந்து 21 பேரை மீட்டு, காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President condoles families of Uttarakhand bus accident victims


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->