ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட பாலம் இல்லாத நிலை; கட்டிலில் கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்ற அவலம்; வழியிலேயே குழந்தை பிறப்பு..!
Pregnant woman gave birth on a bed while being carried on a bed in a river in MP due to lack of bridge for an ambulance to reach
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டம், ஹதோடா ஹிரி கிராமத்துக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாத காரணத்தினால், அங்கு வசிக்கும் சுமார் 20 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மழைக்காலத்தில் ஆற்றில் ஏற்படும் வெள்ளம் காரணமாக மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப் படுகின்றனர். இந்நிலையில், கடந்த புதன் கிழமையன்று அந்த கிராமத்தைச் சேர்ந்த சவிதா விஸ்வ கர்மாவுக்கு (35) பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால், ஆற்றில் வெள்ளம் ஓடியதால் ஆம்புலன்ஸால் வர முடியவில்லை. வேறு வழியின்றி, கிராம மக்கள் அவரை கட்டிலில் படுக்க வைத்து, தோளில் சுமந்தபடி ஆற்றைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது வலி தீவிரமடைந்து வழியிலேயே சவிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதன் பின்னர், தாயையும் குழந்தையையும் பத்திரமாக ஆற்றின் மறுபக்கத்துக்குக் கொண்டு வந்த கிராம மக்கள், ஆம்புலன்ஸுக்காக நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர். அப்போதும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் தாய் மற்றும் சேயை ஒரு மோட்டார் சைக்கிளில் அமரவைத்து அமர்வாடா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ள அப்பளம் அரங்கேறியுள்ளது. இருப்பினும், தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ஹதோடா ஹிரி கிராமம் ஒவ்வொரு மழைக் காலத்திலும் துண்டிக்கப்படுவதாகவும், பாலம் மற்றும் சாலை வசதி கேட்டு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அம்மாநிலத்தின் கிராமப்புற மருத்துவக் கட்டமைப்பின் அவல நிலையை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Pregnant woman gave birth on a bed while being carried on a bed in a river in MP due to lack of bridge for an ambulance to reach