தபால் சேவை நிறுத்தம் - இந்தியர்களுக்கு சிக்கல்..  தபால் துறை அறிவிப்பால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, கனடாவுக்கு அனுப்பப்படும் தபால் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று  இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததற்கு எதிர்ப்பாக இந்திய தபால் துறை அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 

முன்பு 800 டாலர் வரை மதிப்புள்ள அஞ்சல் பொருட்களுக்கு வரி விலக்கு இருந்த நிலையில், இப்போது 100 டாலருக்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் , 100 டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு வரி விலக்கு தொடர்கிறது என்பதால் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனடாவில் தபால் சேவை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தபால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

கனடிய தபால் திணைக்களத்தின் தொழிற்சங்கமான CUPW தொடங்கிய நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால், தபால்கள் மற்றும் பொதிகள் விநியோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும், சில தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் Canada Post அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Postal service suspension a trouble for Indians The postal departments announcement has caused a stir


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->