கொலை திட்டத்துடன் வயல்காட்டில் பதுங்கியிருந்த 20 வயது 10 புள்ளிங்கோஸ்.. துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்த காவல்துறை.! - Seithipunal
Seithipunal


பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் உளவாய்க்கால் பகுதியில் இரவு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை நிறுத்தி விசாரணை செய்கையில், மறைத்து வைத்திருந்த கத்தியை கைப்பற்றியுள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அகரம் கிராமத்தில் பயங்கர ஆயுதத்துடன் கும்பல் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து அங்கு காவல் அதிகாரிகள் சென்றதும் கத்தி மற்றும் வீச்சரிவாளுடன் இருந்த குண்டர்களை, துப்பாக்கி முன்னையில் கைது செய்துள்ளனர். மேலும், முன்னதாகவே கூடுதல் காவல் துறையினர் வந்ததால், 10 பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உளவாய்க்கால் பகுதியை சார்ந்த கவுதம் (வயது 20), சென்னையை சார்ந்த பாபு (வயது 19), கண்டமங்கலத்தை சார்ந்த அரவிந்த் (வயது 20), விஸ்வா (வயது 20), மணிபாலன் (வயது 21), கவுதம் (வயது 19), உச்சிமேடு மதன் (வயது 28), மஞ்சக்குப்பம் வெங்கட் (வயது 23), சரத்குமார் (வயது 25), சூர்யா (வயது 23) என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது அம்பலமானது. 

மேலும், இவர்கள் வில்லியனூர் பகுதியை சார்ந்த காங்கிரஸ் பிரமுகரை ஏற்கனவே கொலை செய்ய முயற்சித்த நிலையில், தற்போது மற்றொரு முறையாக கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும், இந்த கொலைக்கு தேவைப்படும் பணத்தை தொழில் அதிபரின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Murder Attempt Gang Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal