சிறுமியை நயவஞ்சகமாக ஏமாற்றி நண்பனின் வீட்டிற்கு அழைத்து சென்று நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம்.! - Seithipunal
Seithipunal


17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொடூரம் அரங்கேறியுள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மணவெளி பகுதியை சேர்ந்தவன் ரஞ்சித் குமார். இவன் கண்டமங்கலத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறான். இவனுக்கு பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள வீட்டில் வசித்து வந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறுமியுடன் ரஞ்சித் நயவஞ்சமாக பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளான் என்பதே உண்மையானது. கடந்த இரண்டு வருடமாக நல்லவன் போல நடித்து வந்த கொடூரன், சிறுமியை ஏமாற்றி காதலிப்பதாக கூறி நம்ப வைத்துள்ளான். 

இதனையடுத்து காதலில் விழுந்த சிறுமியும் காமவெறியனின் உண்மை சுயரூபம் அறியாது காதலித்து வந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் சம்பவத்தன்று வெளியே சென்றுள்ளனர். இதன்போது உன்னை நேரில் பார்த்து பேசவேண்டும் என்று தனியாக ரஞ்சித் அழைத்துச் சென்றுள்ளான். 

சிறுமியை தனது மற்றொரு நண்பரான திவ்யநாதன் என்பவனின் வீட்டிற்கு அழைத்து சென்ற கொடூரன், தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதன் பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறிஅழவே, பதறிப்போன பெற்றோர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காமுகன் ரஞ்சித் குமார், ரியாஸ், திவ்ய நாதன் உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry 17 Aged Girl Sexual Abused by Love boy and his Gang


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal