தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது பட்டாசு தான் - காவல்துறை விளக்கம்.!!
police explain thoothukudi polytechnic college bomb blast issue
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு பயின்று வரும் ஒரு மாணவன் கல்லூரிக்கு நாட்டு வெடியை கொண்டு வந்ததாகவும், அப்போது அவரது நண்பர்கள் அந்த வெடியின் திரியை இழுத்தபோது, அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த இரண்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதைக்கேட்டு ஓடி வந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்த அந்த மாணவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து கல்லூரிக்கு விரைந்து சென்ற போலீசார் வெடி வெடித்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது பட்டாசு என்று மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, "சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை செய்ததில், ஒரு மாணவரால் கொண்டுவரப்பட்ட பட்டாசு வெடித்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆகவே, இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police explain thoothukudi polytechnic college bomb blast issue