கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை திறப்பு: பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
PM Modi inaugurated 77 foot statue of Lord Ram in Goa
கோவா: கோவா மாநிலத்தில் 77 அடி உயர ராமர் சிலையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 28) திறந்து வைத்தார். ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் 550 ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பிரம்மாண்டமான வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சிலையின் சிறப்பு அம்சங்கள்
உயரம்: 77 அடி
சிற்பி: உலகிலேயே மிக உயரமான சிலையான குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்து உருவாக்கிய புகழ்பெற்ற சிற்பி ராம் சுடார்தான் இந்தக் புதிய ராமர் சிலையையும் செதுக்கியுள்ளார்.
உலகின் உயரமான ராமர் சிலை: இந்தக் சிலை உலகின் மிக உயரமான ராமர் சிலை என்று கோவாவின் பொதுப்பணித் துறை அமைச்சர் திகாம்பர் காமத் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
நிகழ்வுகள்
சிலை திறப்பு விழாவுக்குப் பிறகு, பிரதமர் மோடி தெற்கு கோவாவில் உள்ள மடத்தின் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் அசோக் கஜபதி ராஜு மற்றும் முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
English Summary
PM Modi inaugurated 77 foot statue of Lord Ram in Goa