முக்கிய ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி.. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிவேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு  கட்டுப்பாடுகளை தொற்று பாதிப்புக்கு ஏற்றபடி மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 1.5 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்று அதிகம் காணப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அனைத்து மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். காணொளி வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், கொரோனா பரவல் விகிதம் குறித்து, இதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது இந்த கூட்டத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும் பங்கேற்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi advice with governors


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->