சந்திரபாபுவை சந்திக்க அனுமதி மறுப்பு - நடுரோட்டில் படுத்து போராட்டம் நடத்திய பவன் கல்யாண்.! - Seithipunal
Seithipunal


சந்திரபாபுவை சந்திக்க அனுமதி மறுப்பு - நடுரோட்டில் படுத்து போராட்டம் நடத்திய பவன் கல்யாண்.!

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியதுடன், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு கடைகள், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. 

அதுமட்டுமல்லாமல், நேற்று பாதுகாப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் சந்திரபாபு கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதாவது, "சந்திரபாபு நாயுடுக்கு ஜனசேனா கட்சி துணை நிற்கும். அவரது கைது அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்பதையே இது காட்டுகிறது" என்றார்.

இதையடுத்து, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஆவேசம் அடைந்த பவன் கல்யாண் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்.டி.ஆர். மாவட்டத்தில் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க தங்களுடன் ஒத்துழைக்குமாறு காவல்துறை அதிகாரிகள் பவனிடம் வேண்டுகோள் விடுத்து, அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pawan kalyan protest sleeps on road in andira


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->