போர் நிறுத்த ஒப்பந்த்தை மீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்: பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் "ப்ளாக் அவுட்"..!
Pakistan violates ceasefire and launches attacks
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக உதம்பூர், அக்னூர், பூஞ்ச், ராஜோரி, ஜம்மு, ஆர்.எஸ்.புரா, கத்துவா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் எல்லை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் "பிளாக் அவுட் (இருளில் மூழ்கிய பகுதிகள்) செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர், ஜெய்சல்மார், பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர், ஜம்முவின் உதம்பூர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. அத்துடன், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்துவதாக அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் எதிரொலியால், கட்ச் மாவட்டத்தில் மின் வினியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்த எல்லை பாதுகாப்பு படைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
English Summary
Pakistan violates ceasefire and launches attacks