Pahalgam Attack: திருமணமான 7 நாளில் கணவனை இழந்த பெண்! நெஞ்சை உலுக்கும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா முழுக்கவே பரிதாபம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அழகிய சுற்றுலாத் தலமான பைசாரனில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்த, 26 பேர் உயிரிழந்தனர். 

இவர்களில், அரியானாவைச் சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரியான வினய் நர்வால் உட்பட பலர் இருந்தனர். சில நாட்களுக்கு முன்பே திருமணம் செய்து, புதுமண தம்பதியாக தேனிலவுக்காக ஜம்மு-காஷ்மீருக்கு வந்திருந்த நிலையில், மனைவியைக் கண்ணுக்குள் வைத்துக் கொண்டிருந்த கணவன் அவரின் கண்முன்னே கொடூரமாக கொல்லப்பட்டார்.

தாக்குதலுக்குப் பிறகு, கணவனின் உடலருகே சோகமாக அமர்ந்திருக்கும் அவரது மனைவியின் புகைப்படம் இணையத்தில் பரவி, பலரது இதயத்தையும் துளைத்துவிட்டது. 

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த படம், பாசத்தின் மேன்மையையும், இழப்பின் எக்கால சோகத்தையும் ஒரே சமயத்தில் உணர்த்துகிறது. இன்னும் வாரம் கூட முடிவடையாத திருமண வாழ்க்கை, பஹல்காம் மண்ணில் இரத்தமாக உரையாது என்பது நாட்டையே கதறவைத்துள்ளது. 

இந்த தாக்குதல் எத்தனை குடும்பங்களை அழுத்திப் பிழிந்திருக்கிறது என்பதற்கான கொடூரமான எடுத்துக்காட்டு இது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pahalgam Kashmir Tourists Militants Attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->