பஹ்ல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் தெற்கு காஷ்மீரில் பதுங்கியுள்ள்ளனர்: என்.ஐ.ஏ., வட்டாரங்கள்..!
Pahalgam attackers are hiding in South Kashmir NIA sources
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தால் நாடே கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இன்னும் தெற்கு காஷ்மீரில் பதுங்கியுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விசாரணை குறித்து என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது: இந்த தாக்குதல் நடத்தியவர்கள் இன்னும் தெற்கு காஷ்மீரில் பதுங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகள் உள்ளது எனவும், இந்த தாக்குதல் அன்று, சம்பவ இடத்தில் இன்னும் சில பயங்கரவாதிகள் தொலைவில் இருந்துள்ளதாகவும், பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்தால், அவர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக அவர்கள் அங்கு இருந்தனர் என்று கூறியுள்ளனர்.
அத்துடன் குறித்த பயங்கரவாதிகள் அனைவரும் வனப்பகுதியில் பதுங்கி உள்ளதோடு, நீண்ட நாட்கள் அங்கேயே மறைந்து இருந்து செயல்படும் வகையில் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டுவந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் யாரையும் நம்பாமல் தனித்து செயல்படுகின்றனர் என்றும் தேசிய புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Pahalgam attackers are hiding in South Kashmir NIA sources