அதிமுக-பாஜக கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டோம் - தவெக இணைப் பொதுச் செயலாளர் அறிவிப்பு!
TVK Alliance issue ADMk BJP
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இணைவதற்கான வாய்ப்பு ஒருபோதும் இல்லை என்று அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நிர்மல் குமார், தங்கள் கூட்டணி நிலைப்பாட்டில் தவெக உறுதியுடன் இருப்பதாகவும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "நாங்கள் பாஜகவை எங்களின் கொள்கை எதிரியாக அறிவித்தோம். எனவே, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிற எந்தவொரு கட்சியோடும் கூட்டணி வைப்பதற்கு ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லை" என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.
தவெக-வின் நிலைப்பாட்டின்படி, கட்சியின் தலைவர் விஜய்தான் தங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், "எங்கள் கட்சியின் தலைமையையும், முதல்வர் வேட்பாளரையும் ஏற்றுக்கொண்டு, எங்களுக்குக் கொள்கை முரண்பாடுகள் இல்லாத கட்சிகள் யாராக இருந்தாலும், அவர்களுடன் மட்டுமே கூட்டணி வைப்போம். இந்தக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை" என்றும் நிர்மல் குமார் உறுதியாகக் கூறினார். இதன் மூலம், பாஜகவுடனான கூட்டணி வாய்ப்பை தவெக முற்றிலும் மறுத்துள்ளது.
English Summary
TVK Alliance issue ADMk BJP