அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு: டிசம்பர் 10 முதல் தேர்வுகள் தொடக்கம்
tamilnadu haly yearly exam date announce
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணைப்படி, தேர்வுகள் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேதிகள்: டிசம்பர் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.
டிசம்பர் 15: தமிழ்
டிசம்பர் 16: ஆங்கிலம்
டிசம்பர் 17: விருப்ப மொழி
டிசம்பர் 18: கணிதம்
டிசம்பர் 19: உடற்கல்வி
டிசம்பர் 22: அறிவியல்
டிசம்பர் 23: சமூக அறிவியல்
10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான தேதிகள்: டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.
10 ஆம் வகுப்புக்கு, டிசம்பர் 10-இல் தமிழும், டிசம்பர் 12-இல் ஆங்கிலமும், டிசம்பர் 15-இல் கணிதமும், டிசம்பர் 18-இல் அறிவியலும், டிசம்பர் 22-இல் சமூக அறிவியலும், டிசம்பர் 23-இல் விருப்ப மொழியும் நடைபெறும்.
11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு, டிசம்பர் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முறையே தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வுகள் பொதுவானதாக நடத்தப்படும். மற்ற முக்கியப் பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், பொருளாதாரம், கணக்குப்பதிவியல் போன்ற தேர்வுகள் டிசம்பர் 15, 17, 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
English Summary
tamilnadu haly yearly exam date announce